MARC காட்சி

Back
திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்
245 : _ _ |a திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில் -
246 : _ _ |a பாலவியாக்ரபுரி
520 : _ _ |a வியாசர் மற்றும் வியாக்ரபாதருக்கு பெருமாள் காட்சியளித்த திருத்தலம். தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம். புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச் செய்த ஸ்தலம். கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது. கருடா சௌக்கியமா என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம். ஸ்ரீரங்கத்தைப் போன்றே தெற்கு நோக்கிய சயனம். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம். நாகதோஷம் நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனி மகத்துவம். இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த வியக்ர பாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர். அவருக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.
653 : _ _ |a கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, திருச்சிறுபுலியூர், தஞ்சாவூர், வியாக்ரபாதர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய மற்றும் விசயநகர நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.99136975
915 : _ _ |a 79.66851157
916 : _ _ |a சலசயனப்பெருமாள்
917 : _ _ |a க்ருபா ஸமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)
918 : _ _ |a திருமாமகள் நாச்சியார், தயாநாயகி
923 : _ _ |a மானஸ புஷ்கரிணி
924 : _ _ |a பாஞ்சராத்திரம்
926 : _ _ |a பங்குனி உத்திரம், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், இடது பக்கம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார்கள் சந்நதியும் அமைந்துள்ளன. மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன. கூடவே விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின் கரையில் எழுந்தருளியிருக்கிறார்.
930 : _ _ |a இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. ஒருகாலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச் சமாதானப்படுத்துவதற்காகப் பெருமாள் “பாலசயனத்தில்” எழுந்தருளிய ஸ்தலம் இதுவென்பது வரலாறு. வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர் மகாவிஷ்ணுவே என்று நடராஜன் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.
932 : _ _ |a உயர்ந்த இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகின்றது. ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், இடது புறம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார் கள் திருமுன்களும் அமைந்துள்ளன. நந்தவர்த்தனம் என்னும் விமானத்தின் கருவறையில் பெருமாள் சலசயனராக காட்சியளிக்கிறார். மூலவரை தரிசித்துவிட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம். தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை நோக்கியபடியும் அடுத்தடுத்து பெருமாள் திருவுருவங்கள் கோட்டத் தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன. கூடவே விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனித் திருமுன்களில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a சிறுபுலியூர் அய்யனார் கோயில், அனந்தாழ்வார் கோயில்
935 : _ _ |a இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து (மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில் இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை-பேரளம்-திருவாரூர் பாதையில் கொல்லுமங்குடி என்ற ஊரிலிருந்து இடப்புறமாக 3 கி.மீ. பயணம் செய்தால் திருச்சிறுபுலியூரை அடையலாம்.
936 : _ _ |a காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
937 : _ _ |a கொல்லுமாங்குடி
938 : _ _ |a மயிலாடுதுறை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a மயிலாடுதுறை, கும்பகோணம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000132
barcode : TVA_TEM_000132
book category : வைணவம்
cover images TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg

TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-கோபுரம்-0002.jpg

TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-உற்சவர்-0003.jpg

TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-சலசயனம்-0004.jpg

TVA_TEM_000132/TVA_TEM_000132_திருச்சிறுபுலியூர்_அருமாகடல்பெருமாள்-கோயில்-வியாக்ரபாதர்-0005.jpg